சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,
” தற்போதைய சூழ்நிலையில் ஓர் மாற்றுத் தேர்வாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஏனெனில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான ஆகிய நாடுகளும் உதவிகளை குறைத்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் சில நிபந்தனைகளை முன்வைக்கும். எனவே, பேச்சு நடத்தி, எதிர்கால நடவடிக்கைகைள முன்னெடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
நாட்டை மீட்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.
#SrilankaNews