சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” நாட்டில் ஏற்பட்ட வரிசை யுகம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. தற்போது டீசலுக்கு வரிசை. இவ்வாறானதொரு சூழ்நிலையிலா நாம் புத்தாண்டை கொண்டாடுவது?
தாங்கள்தான் நாட்டை சிறப்பாக ஆள்கின்றோம் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர். ஆம். அவர்கள் சிறப்பாகவே செய்துள்ளனர்தான். அதனால்தான் பிரச்சினைகள் தாண்டவமாடுகின்றன.
சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்தி, சமூக உறவை பேணி, டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முற்பட வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews

