11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

Share

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சி.ஆர்.பி .எப். அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

த.வெ.க., தலைவர் விஜய்க்கு மத்திய அரசு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 11 பேர், 24 மணி நேரமும் விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர்.

விஜய் மீதும் செருப்பு வீசப்பட்டதாக காணொளி வெளியாகி உள்ளது. இக்கூட்டத்திலும் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்துள்ளன.

அதுமட்டுமின்றி, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி, சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டிற்குள், சில தினங்களுக்கு முன் மனநலம் பாதித்த அருண், 24 என்பவர் புகுந்தார். இது விஜய் வீட்டில் பாதுகாப்பு குளறுபடி இருப்பதை அம்பலப்படுத்தியது.

தொடர்ந்து, விஜய்க்கான பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், அது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம், டில்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...