வவுனியாவில் நெற்களஞ்சியசாலைளுக்கு சீல்!

637510547761645993Basmati rice with a spoon square

இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியாவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் அரசால் கொடுக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத தாண்டிக்குளம் மற்றும் கொறவப்பொத்தானை வீதிகளில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தும் சபையால் நிர்ணய விலையை செலுத்தி குறித்த களஞ்சியசாலைகளில் உள்ள நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Exit mobile version