தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படுவதாகவும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி திறக்கப்படும் என் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இனி வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெல்லியிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள், போன்றவை 50 சதவீத நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேர ஊரடங்கு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment