பாடசாலை மாணவன் நீரில் மூழ்கிப் பலி! – பதுளையில் துயரம்

badulai

பதுளை நகரத்தை அண்மித்த மெதிரிய நீர்நிலையில் நீராடச் சென்ற மாணவர்களுள் ஒருவர் நீரிழ் மூழ்கிப் பலியாகியுள்ளார்.

பதுளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் நிலக்‌ஷன் (வயது 16 ) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று பகல் நண்பர்கள் சகிதம் நீராடச் சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

#SriLankaNews

Exit mobile version