பாடசாலை சேவைக் கட்டணங்கள் நிறுத்தப்படவேண்டும்!! – சஜித்.

1578038553 sajith premadasa opposition leader 5

நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணமாக 3 ஆயிரம் ரூபா அறிவிடப்படுகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான கட்டணங்கள் அறிவிடப்படக்கூடாது. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை குருணாகலை மாவட்டத்தில் இக்கட்டணத்தை அறவிட்டுள்ள பாடசாலை பெயரையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும்,  நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகியுள்ளது. பொருளாதார ரீதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணம் அறிவிடப்படுகின்றது. இதனை கல்வி அமைச்சர் உடன் தடுத்து நிறுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version