புலமைப்பரிசில் பரீட்சை – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

20220314 085924

“பொறியியலாளராக உருவாகி மக்களுக்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால லட்சியம்” இவ்வாறு 2021 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. குறித்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பெறுபேறுகளின் பின்னர் தனது எதிர்கால லட்சியம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தமிழ்ச்செல்வன் கஜலக்ஸன் மேற்படி தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version