லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சந்தையில் சிலவும் தட்டுப்பாடுகளை குறைக்கவும், விலை ஏற்ற இறக்கத்தை தடுக்கவும் புதிய வலையமைப்பு ஒன்றை நிறுவ வர்த்தக அமைச்சு எத்தனித்துள்ளது.
குறித்த வலையமைப்பு பிரதேச செயலகங்களை மையப்படுத்தியே உருவாக்கப்படவுள்ளது.
இவ்வலையமைப்பின் ஊடாக உள்ளூர் உறபத்திகளுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்குவதும், நியாயமான விலையில் தரமான பொருட்களை நுகர்வோருக்கு வழங்குவதுமே எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த வலையமைப்பு விரைவில் அனைத்து பிரதேச செயலகங்களையும் மையப்படுத்தி ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment