உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு செயற்பாட்டை ரஷ்யா மேற்கொள்ளுமானால், ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது.
ஸ்விப்ட்’ எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
#WorldNews
Leave a comment