திருகோணமலையில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டிக்களிப் பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கண்காணிக்கப்பட்டு வரும், இந்த பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் டீசலுடன் – மண்ணெண்ணெய் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் டீசலை பகுப்பாய்வு செய்வதற்காக பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment