WhatsApp Image 2021 12 16 at 1.10.39 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சஜித்தால அது கூட முடியாது – அப்பட்டமாக சொன்ன ஜகத்!!!

Share

” சஜித் பிரேமதாசவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால் அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்.” – ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” நல்லாட்சியின்போது சஜித் பிரேமதாச பிரதித் தலைவராக இருந்தார். ஆனால் அவர்களால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் போனது. எல்லாவழிகளிலும் நாட்டை குழப்பினர்.

இவ்வாறு செய்தவர்கள் இன்று இந்த அரசை விமர்சித்து, ஆட்சியைக் கோருவது வேடிக்கையானது.

கொரோனா பெருந்தொற்றால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இதனை பயன்படுத்தி அரச எதிர்ப்பு அலையை உருவாக்கலாம். இது நிரந்தரமல்ல. நாம் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கி முன்னேறுவோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...