ஹரின் பெர்னாண்டோ
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்குச் சஜித் அணி ஒரு மாதம் காலக்கெடு!

Share

“நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசுக்கு ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும். அவ்வாறு இல்லையேல் எமது போராட்டம் தீவிரமடையும். ஜனநாயக வழியில் அரசை விரட்டியடிப்போம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசுக்கு எதிராக மார்ச் 15 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அரசுக்கு ஒரு மாதம் காலக்கெடுவை வழங்குவதற்கான அறிவித்தலை விடுக்கவே நாம் கொழும்பு வருகின்றோம்.

அந்தக் காலப்பகுதிக்குள் தீர்வு இல்லையேல் எமது போராட்டம் வலுக்கும்.

கொழும்பு வருவதற்கு பஸ் இல்லாவிட்டால் மக்கள் நடந்தாவது வருவார்கள். எனவே, எமது போராட்டத்தைத் தடுக்க முற்படவேண்டாம். நிச்சயம் எமது பலத்தைக் காட்டுவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...