எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியதோடு, மடிக்கணினி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் வீட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சஜித் பிரேமதாசவால் எதிர்வரும் காலங்களிலும் அவர்களின் கல்விக்கான உதவிகள் வழங்கப்படும் என்பதையும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி கண்காணித்து வருகின்றன.
குற்றவாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தபடுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews