இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நிலவும் ஊடக அடக்குமுறைகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்கான சார்க் (SAARC) பத்திரிகையாளர்கள் மன்றத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு நாளை (04) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.
பீகார் மாநிலத்தின் நாளந்தா திறந்த பல்கலைக்கழகம் (Nalanda Open University) 2026 ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பீகார் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மொரீஷியஸ் சர்வதேச கலாசார தூதர் சரிதா புத்து, சார்க் பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச தலைவர் ராஜு லாமா (நேபாளம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலைநாட்டவும், ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்.
குறிப்பாக, இலங்கையில் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ள ஊடக அடக்குமுறைகள், கருத்துச் சுதந்திர மீறல்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்படும் தடைகள் குறித்து சார்க் பத்திரிகையாளர்கள் மன்றம் விரிவாகக் கலந்துரையாடவுள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி செய்தி வாசிப்பாளர் சித்ரா திரிபாதி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ஆறு பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றுத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.