ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முக்கிய ஒரு சில அமைச்சர்களும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
21 வது ரஷ்ய – இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாகவே இவ்விஜயம் அமையவிருக்கிறது.
இதன்போது ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலை மற்றும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தல் போன்றவிடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அரவிந்த பாகச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய புரிந்துணர்வை மேம்படுத்திக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
#World