நாடு பூராகவுமுள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் சதொச விற்பனை நிலையங்களிலும் நாளை முதல் ஒரு கிலோ சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
சீனியின் விலை அதிகரிப்பால் நுகர்வோர் எதிர்நோக்கும் கஷ்டங்களை போக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் சீனி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியே துறைமுகத்தில் தேங்கியுள்ளது. இதனாலேயே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment