நாட்டில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
தக்காளி, கறி மிளகாய், போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் மாதம் பண்டிகை காலம் என்பதால் மரக்கறிகளின் விலைகள் கட்டுக்கடங்காத வகையில் இன்னும் அதிகரிக்கலாம் என மரக்கறி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் டிசெம்பர் இறுதி வரை தொடரலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால்,
சமைத்த உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews