மீண்டும் அதிகரிக்கின்றது பேக்கரி பொருட்களின் விலை!!

Bakery Products

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடி விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) காலை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பாக  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில்,

நேற்று (27) முதல் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பேக்கரி பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

.

இதன்படி, நாளை (29) முதல் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version