நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கையில்,
நாட்டில் இதுவரை 48 பேர் ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் பரவலாக கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் தொற்றால்ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் – என்றார்.
#SriLankaNews