சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
எதிர்பார்த்ததைவிட அணு ஆயுதங்களைப் பெருக்கும் சீனாவின் நடவடிக்கை அதிகமாக இருப்பதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
சீன அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 06 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஆயிரமாக உயரலாம் என்றும் பென்டகன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட அணுசக்தியை சீனா விரைவுபடுத்தும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#world