ரிஷாத் – விளக்கமறியல் நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனார் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, இவர்கள் மூவரையும் இம் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிஷாத் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஹிஷாலினி என்ற சிறுமியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலேயே குறித்த மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதான ரிஷாத்தின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment