ரிஷாட் வௌிநாடு செல்ல அனுமதி!

Rishad Badiyudeen

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவிக்கு வௌிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு மேலதிக நீதவான் வழங்கியுள்ளார்.

அவர்களுடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய ஜூட் குமார் ஹிஷாலினி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இருவரும் கட்டாரில் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையை அடுத்து நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version