உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிப்பு?
உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டு பால்மாவின் விலை அதிகரிப்பையும் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை. தேநீர் தயாரிப்புக்கு பால்மாவை விட பசும்பால் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு இலாபமானது.
பசும்பால் பயன்படுத்துவது தற்போது காணப்படும் பால்மா பற்றாக்குறைக்கான தீர்வாக அமையும் என மில்கோ சங்கத் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.