டீசல், பெற்றோல் விலை திடீரென உயர்வு!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்

டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றருக்கு 75 ரூபாவால் அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது எனவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

# SriLankaNews

Exit mobile version