பெண்ணை கடத்திச் சென்ற ரிப்பர் வாகனம் விபத்து!

dipper 960x720 1

பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் டிலக்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இளம்பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த ரிப்பர் வாகனத்தில் கரவெட்டித்திடல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாகவும், குறித்த வாகனத்தை குடும்பத்தினர் துரத்தி சென்றபோதே வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

#SriLankaNews

Exit mobile version