கீரிமலையில் முதியோர் இல்லம் திறப்பு!

சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியின் பயனாக சிவபூமி அறக்கட்டளையினரால் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் பலரின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நல்லூர் ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆன்மீகச்சுடர் ரிசி தொண்டுநாத சுவாமிகள், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எனப் பலரும் கலந்துகொண்டனர்.

IMG 20211118 WA0023

#SriLankaNews

Exit mobile version