உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! – மைத்திரியே பொறுப்பு என்கிறார் ரவி கருணாநாயக்க

Ravi karunanayakka

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

” நல்லாட்சியின்போது ஜனாதிபதியாக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டார். எனவே, 21/4 தாக்குதலுக்கு அவர் பொறுப்புக்கூறவேண்டும்.

ஐந்தாண்டுகள் மைத்திரி ஜனாதிபதியாக செயற்பட்டார். அக்காலப்பகுதியில் அவர் தேங்காய் துருவினாரா?

நல்லாட்சியின்போது 90 வீதமான நல்ல விடயங்களை ஐக்கிய தேசியக்கட்சியே மேற்கொண்டது. எம்மை பழிவாங்கும் நோக்கிலேயே மைத்திரி தரப்பு செயற்பட்டது. அந்த உண்மை வெளியில் வரும்.

அதேவேளை, மத்திய வங்கியானது எனக்குகீழ் இருக்கவில்லை. அரச வங்கிகள் அப்போதைய அமைச்சர் கபீர் ஹாசீம் வசம்தான் இருந்தது. எனவே, பிணைமுறி விவகாரம் தொடர்பில் அவரிடம்தான் கேட்க வேண்டும்.” – என்றார் ரவி கருணாநாயக்க.

#SriLankaNews

Exit mobile version