திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இத் தடை உத்தரவு கொரோனாவில் இருந்து மாறுபாடு அடைந்த ஒமிக்ரோனின் வீரியத்தை கட்டுபடுத்தும் நோக்கத்திலும் மக்களை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கத்திலும் மேற்கொள்ப்பட்டுள்ளது – என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பாக நீச்சல் தடாகங்கள், அணைகள், பூங்காக்கள் என சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய அனைத்து இடங்களும் மூடப்படும் எனவே, அதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
#IndianNews
Leave a comment