பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் .
இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான வாழ்க்கைச் செலவு குழுவுடைய யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதோடு அதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் மேற்குறிப்பிடட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு கடந்த ஜூலை மாதம் முதல் பால் மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வுகாணும் வாயில் இன்று அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பிலான இறுதித்தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்[படும் எனவும் நேற்று (26) நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார் .