சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக இவ்வாறு விலைகளை குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் டொலர் அதிகரிப்பு காரணமாக விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரியுள்ளன.
இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆராய்ந்து அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்தது.
எரிவாயு நிறுவனங்களின் செயற்றிறனின்மையை சீர்செய்து பாவனையாளர்களுக்கு நன்மையை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் இரு சமையல் எரிவாயு நிறுவனங்களை ஒன்றிணைத்து அரச நிறுவனமாக செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போதுள்ள விலையை விட 125–150 ரூபா வரை எரிவாயு விலையை குறைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.