IMG 20251018 WA00431 vb 16
செய்திகள்இந்தியா

கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு நிவாரணம் அனுப்பிய விஜய்! 

Share

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு, அக்கழகத்தின் தலைவர் விஜய், தலா ரூ. 20 லட்சம் இந்திய ரூபாயை நிவாரணத் தொகையாக அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த வாரம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருந்த விஜய், அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அந்தத் தொகை அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு வணக்கம். கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்றவாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.

இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்,” என்று விஜய் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...