ரிசாத் பதியுதீனை விடுதலை செய்க! – ரணில் வேண்டுகோள்

ranil wickremesinghe 759fff

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான ஆதாரங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்ய முடியுமா என சபாநாயகர் சட்டமா அதிபரை கோர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் குற்றவாளி என்றால் அவருக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கை முன்னெடுங்கள். அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Exit mobile version