புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ் பகுதி அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற குறித்த படகு மூழ்கியதில் படகில் பயணித்த 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது. விபத்தில் 5 பெண்கள், ஒரு சிறுமி ஆகியோர் உட்பட 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் குறித்த பகுதியில் உடல்களை பார்த்த மீனவர் ஒருவர் வழங்கிய தகவலின்படி மேட்டுப்பணியினர் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற மீட்புப்படையினரால் நீரில் மூழ்கியவர்களையும் உயிரிழந்த உடல்களையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடத்தல்காரர்கள் என தெரிவிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆங்கில கால்வாய் ஊடாக ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில். குறித்த பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான படகு விபத்து இது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அவசரக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
#World
Source- SkyNews