எரிபொருளுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிக்க வேண்டுமாக இருந்தால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக, பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்காக தமது வாகனத்துக்குப் பின்னால் பயணிக்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை எனவும், ஜனாதிபதி கூட, தம்முடன் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
யுத்த காலத்தில் இருந்ததைப் போன்று, அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போது பாதுகாப்பு அவசியமில்லை என்றும் ஆகவே பாதுகாப்பு வாகனங்களைக் குறைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களாயின், அவர்கள் தற்போதைய சந்தர்ப்பத்தில் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews