பதுளை, பண்டாரவளையின் இருவேறுப் பகுதிகளில், இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றில் ஆணொருவரின் சடலம் கிடப்பதாக தகவல் வழங்கப்பட்டது.
அதேபோன்று பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் கிடப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலங்கள் கிடக்கும் இடத்துக்கு பொலிஸார் இன்று (24) காலை சென்றுள்ளனர். சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
#SrilankaNews
Leave a comment