அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

corona death 56767

அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

பூகொட, யகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பூகொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் (வயது–43) அக்காவும், முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் அவரது சகோதரருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

அவர்கள் இருவரும் நேற்றிரவு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற பின்னர் நித்திரைக்கு சென்றனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது உறவினர்களில் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் இருவரும் கீழே தரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த உறவினர் சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து இருவரதும் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version