செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஈரப்பெரியகுளத்தில் ஆணின் சடலம் மீட்பு!!

Share

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈரப்பெரியகுளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக காலையில் இருவர் சென்றிருந்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருப்பதாக கூறி குளத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

மற்றைய நபர்  குளத்தில் இருந்து வெளியே வந்து வீடு நோக்கி சென்ற போது கூட வந்தவர் குளத்து ஓழுங்கை ஒன்றில் மரணித்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

வவுனியா, கல்நாட்டியகுளம், மதுரா நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜலகுலசராசா என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...