முல்லைக்கு பெருமை சேர்த்த ஊடகவியலாளர் மகள்! – புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும், தவசீலன் புவணாயினி என்ற மாணவி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

1975 ஆண்டு குறித்த பாடசாலை பாடசாலையில் மாணவி ஒருவர் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருந்தார்.

அதன் பின்னர் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர். இந்த நிலையில், 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் பெற்ற செல்வி. த.புவணாயினிக்கு பாடசாலை சமூகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்,கல்வியாளர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

22 622e7d3491f6d

Exit mobile version