“பழைய முறைமையின்கீழ் (விகிதாசார) மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.
“புதிய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கு காலமெடுக்கும். எல்லை நிர்ணயம் தொடர்பில் சர்ச்சை இருக்கின்றது.
எனவே, தேவையான சட்டத்திருத்தத்தை மேற்கொண்டு, பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்தலாம். அந்தவகையில் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயார்.” – எனவும் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews