2022 ஆம் ஆண்டு எனக்கான அரசாங்கம் அமையவுள்ள ஆண்டு. அது ராஜபக்ச குடும்பத்துக்கான ஆண்டு கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பெருவெளியில் இடம்பெற்ற உடைக்க சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
நட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம்.
இதன்படி, மக்களுக்குத் தேவையான மூன்று வேளைக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட அனைத்தையும் வழங்குவோம்.
அத்துடன். மாட்டு மக்களுக்கு எரிபொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கக் கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பிப்போம்.
இவை அனைத்தையும் புதிய ஆண்டில் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிப்போம் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
#SriLankaNews