மன்னார்குடி மற்றும் கோவை இடையே இயங்கி வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன அதன் பின்னர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதனால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
மன்னார்குடி மற்றும் கோவை இயங்கிவந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
இந்த கோரிக்கைகள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டதன் காரணமாக அக்டோபர் 7 முதல் மீண்டும் மன்னார்குடி கோவை இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment