சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட அசாத்சாலிக்கு மீண்டும் விளக்கமறியல்

AsadSali

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஷரீஆ சட்டம் தொடர்பில் சர்ச்சையான கருத்தொன்றை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version