ஆப்கானிஸ்தானில் இன்று மற்றுமொரு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், 50 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர்.
ஆனாலும் அவர்களால் தற்காலிக அரசையே அமைக்க முடிந்தது.
எனினும் அந்த அரசு இதுவரை பதவி ஏற்கவில்லை.
தலிபான் ஆட்சி அமைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குண்டுஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமையான இன்று மசூதி ஒன்றில், தொழுகை இடம்பெற்றது.
அவ்வேளையில் மசூதியை குறிவைத்து பயங்கரவாத குண்டுத் தாக்குதலொன்று நடைபெற்றுள்ளது. அதில், 50 பேர் சாவடைந்தனர்.
90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத் தாக்குதலை தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் உறுதிப்படுத்தி உள்ளார்.
மசூதிக்கு அருகில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுக்கையில்,
குண்டுத்தாக்குதலில் படுகாயம் அடைந்த 90க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 50 பேர் சாவடைந்துள்ளனர். அதில் 15 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இன்னும் பலரது உடல்கள் வந்து கொண்ட உள்ளன. பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் – எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை மதம் சார்ந்த பாடசாலை ஒன்றில் நடந்த குண்டுத்தாக்குதலில் 7 பேர் சாவடைந்தனர்.
மேலும் இவ் இரண்டு தாக்குதல்களையும் இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment