ஓமிக்ரோன் எனும் புதிய வகை கொரோனாத் தொற்று வேகமாக பரவலடையும் தன்மை கொண்டது என டாக்டர் சந்திம ஜீவந்தர – தெரிவித்தார்
தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட இப்புதிய வகை வைரஸ், சுமார் 30 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது எனவும் டெல்டாவை விட அதிகமான ஆபத்தை ஏற்படுத்த கூடிய ஒன்று எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இப் புதியவகை தொற்று நாட்டுக்குள் நுழைவதை தாமதப்படுத்தாவிட்டால், குறித்த கொரோனா மாறுபாடு இலங்கையை இரு மடங்காக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், இலங்கை வைரஸை அடையாளம் காணக்கூடிய ஆய்வுகூட வதிகளைக் கொண்டு தயாராக உள்ளமையினால் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் வலியுறுத்தினார்.
#SriLankaNews