நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஓருவர் காணாமல்போயுள்ளார்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஆகிய 12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.
ஆயிரத்து 504 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
#SriLankaNews