சீரற்ற காலநிலை! – 17,481 குடும்பங்கள் பாதிப்பு

rain

நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.சீரற்ற காலநிலையால் 17,481 குடும்பங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

1,498 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 23 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

3,537 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version