புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கமும் போராட்ட களத்தில்!!!

1628820916 7447003 hirunews

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதுகாப்பற்ற புகையிரத சமிஞ்சை முறைமையினால் பொது பயணிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளமை, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் முறையற்ற இடமாற்றம், புகையிரத திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படாமை, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

எமது தொழிற்சங்க நடடிக்கைகள் பொது பயணிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

Exit mobile version