புகையிரத அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தொடர்ந்து பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத அதிபர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பொதிகளை பொறுப்பேற்றல் மற்றும் பயணச் சீட்டு விநியோகம் போன்றவற்றின் புறக்கணிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தினமும் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment