மோடி ராகுல்
அரசியல்இந்தியாசெய்திகள்

பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார் மோடி! – ராகுல் குற்றச்சாட்டு

Share

பெற்றோல், டீசல் வரி குறைப்பு விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

பெற்றோல், டீசல் மீதான ‘வட்’ வரியைக் குறைக்குமாறு, மாநில அரசுகளைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் கருத்துத் தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“எரிபொருள் விலை உயர்வுக்கு மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. நிலக்கரி தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. ஒட்சிசன் தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது.

எரிபொருள் மீதான வரிகளில், 68 சதவீதத்தை மத்திய அரசுதான் எடுத்துக்கொள்கின்றது. இருப்பினும், பிரதமர் மோடி பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார். அவரது கூட்டாட்சி தத்துவம், ஒத்துழைப்பானது அல்ல, நெருக்கடி கொடுக்கக்கூடியது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...